பராமரிப்பு பணி காரணமாக 41 புறநகர் ரயில்கள் இன்று (அக்டோபர் 2) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் அத்தியாவசிய போக்குவரத்தாக இருப்பது புறநகர் ரயில்கள். இந்த ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வழித்தடங்களில் 41 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணிநேர பராமரிப்பு பணிக்காக புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை- தாம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே புறப்படும் ரயில்கள் காலை 10.55 முதல் மதியம் 1 மணி வரை இயங்காது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று விடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி, கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல்: தமிழகத்தில் ரூ.10,481 கோடி!
பத்திரிகையாளர் நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்