தாம்பரத்தைத் தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலைய இடிப்பு பணி தீவிரம்!

தமிழகம்

சென்னை ரயில்வே கோட்டத்தின் தாம்பரம் பணிமனையில் பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்களின் புறப்படும் நேரம் – வருகை நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிக்காக, ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் கவுன்டர் மற்றும் முன்பதிவு அலுவலகம் செயல்பட்ட ரயில்வே கட்டடம் இடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது.

முதல்கட்டமாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகள் குடியிருப்புகள் இடிப்பு, மரங்கள் அகற்றுதல் பணி முடிந்த பிறகு, ரயில்வே கட்டடம் அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதையடுத்து, எழும்பூர் ரயில் நிலையத்தை ஒட்டி காந்தி இர்வின் சாலை பக்கமும், பூந்தமல்லி சாலை பக்கமும் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிக்காக, எழும்பூர் ரயில் நிலையத்தின் வடக்குபகுதியில் அமைந்திருந்த ரயில்வே கட்டடம் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ரயில்வே அதிகாரிகள், “எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தளப் பணி நிறைவடைந்துள்ளது. இங்கு இரண்டு தளம் வரை கட்டடம் எழுப்பட்டுள்ளது.

இதுதவிர, எழும்பூர் ரயில் நிலையத்தின் காந்தி – இர்வின் மற்றும் பூந்தமல்லி பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக இடம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதற்கிடையில், ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் (பூந்தமல்லி சாலை பக்கம்) ரயில்வே கட்டடம் இடிக்கும் பணி நடைபெறுகிறது.

இந்த கட்டிடத்தில் புறநகர் ரயில் டிக்கெட் கவுன்டர், முன்பதிவு டிக்கெட் கவுன்டர் உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டன.

இந்தக் கட்டடம் இடிக்கும் பணி 20 நாட்களுக்கு முன்பு தொடங்கி, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டப்படும். இங்கு ரயில்வே அலுவலகம் அல்லது வணிக வளாகம் இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: உடற்பயிற்சிகள் மூலம் மூளையை வலுப்படுத்தலாம்… எப்படி?

பியூட்டி டிப்ஸ்: உடல்நலக் குறைவுக்குப் பிறகு அதிகமான முடி உதிர்வு… தீர்வு என்ன?

டாப் 10 நியூஸ் : பொதுப் பிரிவு கலந்தாய்வு முதல் வாழை 2வது பாடல் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழம்- வேர்க்கடலை மில்க்‌ஷேக்

+1
2
+1
0
+1
1
+1
2
+1
0
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *