சென்னை எழும்பூர் – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை வந்தே பாரத் ரயில் சேவை கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயிலானது தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக நெல்லைக்கு சென்றடையும்.
தென் மாவட்டத்திற்கு இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக கடந்த மே மாதமே கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை இயங்கி வந்த வ.எண். 06067 / 06068 வந்தே பாரத் ரயில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் வியாழக்கிழமை தோறும் நாகர்கோவில் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மதியம் 2.50 மணிக்கு மீண்டும் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு இரவு 11.45 மணிக்கு சென்று சேரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
இந்தி பேசுபவர்கள்… வைரலாகும் வீடியோ: தயாநிதிமாறன் ரியாக்ஷன் என்ன?
தமிழகத்தில் மூலை முடுக்கெங்கும் வேலைவாய்ப்பு : டி.ஆர்.பி ராஜா பேட்டி!