Will there be water shortage in Chennai?
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன.
இந்த ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு இருப்பு 75 சதவிகிதமாக சரிந்துள்ளது.
இதனால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஐந்து ஏரிகளையும் சேர்த்து தற்போது மொத்தம் 8,931 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10 டி.எம்.சிக்கும் மேல் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடிநீர் ஏரிகளில் 2 டி.எம்.சி.தண்ணீர் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் உயரும்போது குடிநீர் தேவை அதிகரித்து ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறையும்.
ஏற்கனவே கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் தண்ணீர் முழுவதும் வற்றியதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து கோடைக் காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீரைப் பெற அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. இதில் 2,253 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,081 மி.கன அடியில் 745 மி.கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3,231 மி.கன அடியில் 2,404 மி.கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3,645 மி.கன அடியில் 3064 மி.கன அடியும், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 465 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
துரைமுருகனை தொடர்பு கொண்ட வைகோ… வைகோவுக்கு எடப்பாடி தூது!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாட்டு அரசியல் வானம் தி.மு.க! மேகங்கள் கலையலாம், வானம் மறையுமா?
சமூக ஊடகங்களுக்கு நிரந்தர தடை: பாகிஸ்தானில் தீர்மானம்!
Will there be water shortage in Chennai?