ரூ.190 கோடியில் உட்புறச் சாலைகளைச் சீரமைக்கும் சென்னை மாநகராட்சி!

தமிழகம்

சென்னையில் ரூ.190 கோடியில் உட்புறச் சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பருவமழையின்போது, சேதமடைந்த சாலைகளில் ஜல்லிக் கலவை (Wet Mix Macadam), தார்க்கலவை (Hot Mix) மற்றும் குளிர் தார்க்கலவை (Cold Mix) கொண்டு சீரமைக்கப்பட்டது.

தற்போது நிறைவு பெற்ற நிலையில், சென்னையில் சாலைப் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடி மதிப்பீட்டில் 204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், சென்னையில் ரூ.190 கோடிக்கு உட்புற சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, 268 கி.மீ கொண்ட 1,661 உட்புற சாலைகளை 131 கோடி செலவிலும், 34 கி.மீ நீளம் கொண்ட 309 சிமெண்ட் கான்கிரீட் சாலைகளை ரூ.35 கோடி செலவிலும், மேலும் 7 கி.மீ நீளம் கொண்ட 124 சாலைகளை ரூ.4.28 கோடி செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, 307 கி.மீ நீளம் கொண்ட 2,084 சாலைகளை ரூ.190 கோடி செலவில் அமைக்கவும் இந்தப் பணிகளை விரைந்து முடிக்கவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

ராஜ்

“நான் சிட்டிங் மந்திரி…” -அமலாக்கத் துறையிடம் கத்திய செந்தில்பாலாஜி

எடப்பாடியை அழைத்த அமித்ஷா: ரகசியத்தை உடைத்த அண்ணாமலை

உக்ரைன் அணைகள் உடைப்பு: உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு ஆபத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *