சென்னை மாநகராட்சியில் தொழில் வரி மற்றும் சொத்து வரி கட்டாத 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று (டிசம்பர் 20) சீல் வைத்தனர்,
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள கடைகளில் தொழில் வரி, சொத்து வரி, முறையாக உரிமம் பெறாமல் கடை வைத்திருப்பவர்கள் உடனடியாக நிலுவைத்தொகையை கட்ட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், தொழில் வரி மற்றும் சொத்து வரி கட்டாமல் இயங்கி வந்த 125 கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதி சாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெரு, ராயப்பேட்டை எல்.பி சாலையில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க முயன்றபோது, சில கடைகளில் அதிகாரிகளுக்கும் கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருப்பினும் காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் வரி கட்டாமல் இயங்கி வந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.
செல்வம்
சினிமாவில் வசனகர்த்தாவுக்கான இடம்: ‘விஜயானந்த்’ மதுரகவி பேட்டி!
அடுத்த 3 மணி நேரத்தில் மழை..மீனவர்களுக்கு எச்சரிக்கை!