சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கான அபராதத் தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் கவனிப்பாரின்றி சுற்றித் திரியும் கால்நடைகளால் அடுத்தடுத்து விபத்துக்கள் நேர்ந்து வருகின்றன. மேலும் சில கால்நடைகள் இருசக்கர வாகன ஓட்டிகளை த்தாக்குவதில் அவர்கள் படுகாயம் அடையும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இதைத் தடுப்பதற்காக மாநகராட்சி சார்பில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், நேற்று (ஜூலை 30) மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் முகேஷ் குமார், ஆணையாளர் குமரகுருபரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
அப்போது மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், முதன்முறையாக மாடு பிடிபட்டால், 10,000 ரூபாயும், இரண்டாவது முறையாக பிடிபட்டால் 15,000 ரூபாயும் அபராதத்தொகை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவுக்காக மாடுகள் பிடிபட்ட மூன்றாவது நாளில் இருந்து கூடுதலாக 1,000 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் முதல் ஐடிஆர் தாக்கல் செய்ய கடைசி நாள் வரை!
கிச்சன் கீர்த்தனா: நாவல் பழ அல்வா
தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி ஏழைகளிடம் அபராதம் வசூலிப்பதா?: ராகுல் காட்டம்!
தனுஷுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம் : கார்த்தி கண்டனம்!