புதிய டெண்டர் விடும் வரை சென்னையில் முக்கிய இடங்களில் பார்க்கிங் கட்டணம் கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளான மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதற்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அடிப்படையில் அனுமதி வழங்கப்பபட்டது. அதன்படி இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்க்கு ரூ.5-ம், 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்க்கு ரூ.20-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சில நாட்களுக்கு பிறகு வாகன ஓட்டிகளிடம் ரூ.300 வரை பார்க்கிங் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்ததை அடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து எதிர்த்து தனியார் நிறுவனம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் ’பார்க்கிங் ஒப்பந்தத்தை ரத்து செய்தது செல்லும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னையில் மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட வாகன நிறுத்துமிடங்களை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி இன்று அறிவித்துள்ளது.
மேலும் அதையும் மீறி கட்டணம் கேட்டு யாராவது மிரட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தேசிய அரசியலில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம்
அண்ணாமலை தோல்வியால் மொட்டையடித்த பாஜக நிர்வாகி : வனத்துறை விசாரணை!