கோரமண்டல் ரயில் விபத்தில் 120 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் ஒடிசா தீயணைப்பு சேவைகள் பிரிவு தலைவர் சுதான்ஷு சாரங்கி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 3.20 மணிக்குக் கிளம்பி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசா அருகே பாலசோர் பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்தில் ஒடிசா பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ஒடிசா தீயணைப்புத் துறை, மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஸ்பெஷல் டீம் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டிருப்பதால், பெட்டிகளுக்கு அடியில் சிக்கி இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர்.
மத்திய அரசு 2 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தீயணைப்பு சேவைகள் பிரிவு தலைவர் சுதான்ஷு சாரங்கி பலி எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “அனைத்து குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
இதுவரை 400 பேரை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளோம்.
இதுவரை 120 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம்” என்று கூறியுள்ளார்.
பிரியா
ரயில் விபத்து: ஒடிசா செல்லும் தமிழக அமைச்சர்கள்!
கோரமண்டல் ரயில் விபத்து: உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு காவல்துறை!