பொதுமக்களை கவரும் வகையில்,சென்னை எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம் கடற்கரைகளை சீரமைக்கும் முயற்சியில் சிஎம்டிஏ ஈடுபட்டுள்ளது. Chennai city to dress up three more beaches
சென்னையின் மிக முக்கியமான பொழுதுபோக்கு இடமாக மெரினா கடற்கரை உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். விழாக்காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்தநிலையில், மெரினா கடற்கரையைப் போல, பார்க்கிங், உணவு வசதி, நடைபாதை என சகல வசதிகளுடன் மக்களை கவர்வதற்காக எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம் கடற்கரைகளை அழகுப்படுத்த சிஎம்டிஏ தயாராகி வருகிறது. இதற்காக விரிவான செயல் திட்டங்களை வகுக்க டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளை சீரமைப்பதன் மூலம் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பும், வியாபாரிகளின் பொருளாதாரமும் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கடற்கரைகள் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணியை சிஎம்டிஏ செயல்படுத்த உள்ளது.
ஏற்கனவே இதுபோன்று திருவொற்றியூர், காசிமேடு, அக்கரை மற்றும் ஈஞ்சம்பாக்கம் கடற்கரைகளை அழகுப்படுத்துவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.
சிஎம்டிஏ திட்டத்தின் கீழ் எண்ணூர், தனங்குப்பம் கடற்கரை முகத்துவாரத்தில் 4 கி.மீ தூரத்திற்கு சைக்ளிங் ட்ராக் மற்றும் வாக்கிங் செல்வதற்காக நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது.
பெசன்ட் நகர் உடைந்த பாலம் (ப்ரோக்கன் பிரிட்ஜ்) முதல் திருவான்மியூர் கடற்கரை வரை அழகுப்படுத்தும் திட்டத்திற்கு பெஸ்ஸி 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இங்கு கார் பார்க்கிங் வசதிகள், மக்கள் சந்திப்புகள், மதக் கூட்டங்கள், கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 7 கி.மீ தூரத்திற்கு அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது.
அதேபோல கோவளம் கடற்கரையில் 2 கி.மீ தூரத்திற்கு அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இங்கு கடற்கரை விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக இந்த சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா கூறும்போது, “எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம் கடற்கரைகளை அழகுப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
மேலும், கடற்கரைகளை அழகுப்படுத்தும் பணியானது இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் துவங்கும். அதேபோல, திருவொற்றியூர், காசிமேடு, அக்கரை மற்றும் ஈஞ்சம்பாக்கம் கடற்கரைகளை சீரமைக்கும் பணியானது பிப்ரவரி மாதம் துவங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹிந்தியில் ஜோதிகா ரீ-என்ட்ரி… திகில் பறக்கும் ’சைத்தான்’ டீசர்!
ஆணாதிக்கம் காரணமாகவே சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமை தொடர்கிறது: அலங்கார் ஷர்மா
Chennai city to dress up three more beaches