தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் மற்றும் அரசினர் தோட்டம் வழியே ஆலந்தூர் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் 63,69,282 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இன்று காலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் மற்றும் அரசினர் தோட்டம் வழியே ஆலந்தூர் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் மற்றும் அரசினர் தோட்டம் வழியே ஆலந்தூர் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிபார்த்து வருகிறது. விமான நிலையத்தை அடைவதற்கு பயணிகள் ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ சேவை பாதிப்பால் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வோர் அவதியடைந்துள்ளனர்.
செல்வம்