பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் விடிய விடிய மது அருந்திய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தீயில் கருகி உயிரிழந்து இருக்கிறார்.
சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் கட்டுமான நிறுவன தொழில் அதிபர் சுரேஷ்குமார்(52).
இவரது மகன் ஸ்டீபன் ராஜ் என்பவரின் மனைவி சுஜிதா பிரசவத்திற்காக வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் குடும்பத்தினர் அனைவரும் அங்கு சென்று விட்டனர். வீட்டின் இரண்டாவது தளத்தில் படுக்கை அறையில் சுரேஷ்குமார் இருந்தார்.

இந்த நிலையில் இன்று(டிசம்பர் 15) காலை இவரது வீட்டிலிருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
சூளைமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது அறை முழுவதும் தீப்பற்றி எரிந்திருந்ததும், சுரேஷ் குமார் தீயில் கருகி உயிரிழந்ததும் தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் சுரேஷ் குமார் விடிய விடிய அளவுக்கு அதிகமாக மது அருந்தியதுடன், சிகரெட் புகைத்துவிட்டு அணைக்காமல் அப்படியே போட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அறை முழுதும் தீப்பற்றியதுடன், சுரேஷ்குமாரும் கருகி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் மின்கசிவு காரணமாக ஏசி எந்திரம் தீப்பிடித்து இறந்தாரா?. சிகரெட் புகைத்து விட்டு அணைக்காமல் போட்டதுதான் விபத்திற்கு காரணமா என தடவியல் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.
கலை.ரா
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைகிறது: மீண்டும் கனமழை எச்சரிக்கை!
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!