பேருந்து, ரயில், மெட்ரோ : ஒரே டிக்கெட் எப்போது?

தமிழகம்

பேருந்து, ரயில், மெட்ரோ ஆகிய போக்குவரத்துகளில் பயணிப்பதற்கு ஒரே இ-டிக்கெட் முறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று சி.எம்.டி.ஏ இன்று (மார்ச் 29) தெரிவித்துள்ளது.

சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து வகையான போக்குவரத்துகளிலும் பயணிக்கும் பயணிகளின் வசதிகளுக்காக ஒரே பயணச்சீட்டு முறை சேவையைக் கொண்டு வர கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரே பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது. இ-டிக்கெட் முறைக்காக செல்போன் செயலியும் உருவாக்கப்படவுள்ளது.

செல்போன் செயலியல் பயணிகள் புறப்படும் இடம் மற்றும் இறங்கும் இடம் ஆகியவற்றைப் பதிவிட்டு, அதன் பிறகு பயணிக்க உள்ள போக்குவரத்து முறைகளைப் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பயணிகளின் பயண விவரங்களுக்கு ஏற்ப பயணக்கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது.

மோனிஷா

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு: ஒரே கட்டமாய் மே 10

பல் பிடுங்கிய புகார்… ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் : ஸ்டாலின் அதிரடி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *