சென்னை: ஒப்புதல் பெறாத கட்டிடங்களுக்கு அனுமதி?

தமிழகம்

சென்னையில் ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதியளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளிலும் அரசு அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் பல மாடி கட்டடிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தரப்பில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, அடையாறு பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் மேற்கோள்ளப்பட்ட சோதனையில் பல மாடி கட்டிடங்கள் முறைகேடாக கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த கட்டிடங்கள் அனைத்தும் 2007 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. அம்னெஸ்டி எனப்படும் குற்றத்தை மன்னித்து விடுவித்தல் என்ற திட்டத்தின் கீழ் முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதே போன்ற நடைமுறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதியளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டுவதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இந்தசூழலில் சென்னையில் ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அரசு அனுமதியளிக்க உள்ளது கட்டிட உரிமையாளர்கள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

நாடெங்கும் கள்ள துப்பாக்கி : என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

மழை குறுக்கீடு: பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0