சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் நாளை இயங்காது என்று தென்னக ரயில்வே துறை இன்று(செப்டம்பர் 21) அறிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் நடக்கவிருப்பதால், நாளை(செப்டம்பர் 22) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இயங்காது.
அதற்குப் பதிலாக சென்னை கடற்கரை- பல்லாவரம் இடையே, சிறப்புப் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ஆனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும். அதனால் பயணிகள் தங்கள் பயணத்தை இதற்கேற்றவாறு திட்டமிட்டுக்கொள்ளவும் என்று தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….