சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கி நகை கொள்ளை தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட் 13) சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் 20 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.
அதனை தொடர்ந்து, நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது நகை கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பாலாஜி என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து சிறிதளவு நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வங்கியின் காவலாளி சரவணனிடம் சந்தேகத்தின் அடிப்படையில், அவரது செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை தொடர்பாக தற்போது 12 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
வங்கிக் கொள்ளையர்கள்: போலீஸ் வெளியிட்ட போட்டோ- டிஜிபி பரிசு அறிவிப்பு!