சென்னை விமான நிலையத்துக்கு இன்று (ஆகஸ்ட் 12) வருகை தரும் மற்றும் புறப்படும் முக்கிய விஐபிக்கள் குறித்து இச்செய்திக் குறிப்பில் பார்ப்போம்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று காலை 9.50 மணிக்கு சென்னை வந்து, பிற்பகல் 4.55 மணிக்கு டெல்லி செல்கிறார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை தூத்துக்குடி சென்று அங்கிருந்து மதியம் 3 மணிஅளவில் சென்னை வருகிறார். பின்னர் இரவு ஏழு மணி விமானத்தில் கோவை செல்கிறார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பிற்பகல் 4.25 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வருகிறார்.
மத்திய அமைச்சர் சர்வானந்த் சோனோவால் இரவு 10மணிக்கு ஹவுகாத்தியில் இருந்து சென்னை வருகிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிற்பகல் 2.20 மணிக்கு திருச்சி செல்கிறார்.
தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பிற்பகல் 3.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வருகிறார்.