சென்னை முழுவதும் கனமழை பெய்துவருவதால், சென்னை விமான நிலையம் இன்று (நவம்பர் 30) மாலை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் ‘ஃபெஞ்சல்’ என்ற புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது.
வேளச்சேரி, கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் விமான ஓடுதளத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளதால், இண்டிகோ, ஃபிட்ஸ் ஏர் உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மகாபலிபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளதால் இன்று மதியம் 12 முதல் மாலை 7 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாகச் சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஃபெஞ்சல் புயல்… சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை குறைப்பு!
ஹெல்த் டிப்ஸ்: ‘பஃபே’வுக்குச் சென்றால் எந்த வரிசையில் சாப்பிடுவது ஆரோக்கியமானது?