சென்னையில் அதிக காற்று மாசுபாடு… நாளை விடுமுறையா?

Published On:

| By christopher

தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் தீவிர காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பலரும் நாளை(நவம்பர் 14) விடுமுறை அளிக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படும். இதன்காரணமாக காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என இந்த ஆண்டு சென்னை காவல்துறை கட்டுபாடு விதித்தது.

ஆனால் சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவு 10 மணி தாண்டியும் பல்வேறு இடங்களில் அதிக புகை கக்கும் மற்றும் அதிக சத்தம் கொண்ட வாண வேடிக்கை வெடிகள் வெடிக்கப்பட்டன.

மேலும் அரசின் விதிப்படி சென்னையில் நேற்று காலை குறிப்பிட்ட நேரங்களில் அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கியதை அடுத்து  காற்று மாசு மேலும் அதிகரித்தது.

அதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 250க்கு மேல் சென்றது. இது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மிக மோசமான நிலை ஆகும். வேளச்சேரியில் தரக்குறியீடு 301ஐயும், பெருங்குடியில் தரக்குறியீடு 231ஐயும் தொட்டது. இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், குறிப்பாக ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய் உள்ளவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகர் ஸ்ரீதேவி காலனியில் 147, கொடுங்கையூர் பகுதியில் 150 என்ற அளவை தாண்டிச் சென்றது.

எனினும், ராயபுரம், அண்ணா சாலை போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் 100க்கும் குறைவாக இருந்தது.

இதே போன்று செங்கல்பட்டில் 242, புதுச்சேரியில் 243, மதுரையில் 132 ஆகவும் காற்றின் தரக்குறியீடு காணப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுவதை அடுத்து நாளையும் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் சமூகவலைதளங்களில் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சிங்கப்பூரிலும் பெரியார்! ஸ்ரீரங்கத்திலும் பெரியார்! அரை நூற்றாண்டு கடந்தும் முளைக்கும் விதைகள்!

ஒரேநாளில் 300 டன் பட்டாசு கழிவுகள்… அகற்றும் தூய்மை பணியாளர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share