விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல 125 சிறப்பு பேருந்துகள்!

Published On:

| By Minnambalam

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

அதன்படி ஜனவரி 12, 13, 14 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் உட்பட சுமார் 17,000 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதன் மூலம் சென்னையில் பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விடுமுறைகளைத் தொடர்ந்து இன்று ஏராளமான மக்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வருகின்றனர்.

அவ்வாறு சென்னைக்கு வரும் பொதுமக்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதே நேரம் சென்னை வந்ததும் பல்வேறு பகுதிகளுக்கும் செல்வதற்காக இன்று அதிகாலையிலிருந்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

-ராஜ்

12 ஆண்டுகளுக்குப் பிறகு போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரயில்கள் இயக்கம்!

சென்னை வந்தார் சே குவேரா மகள்: கம்யூனிஸ்ட்டுகள் உற்சாக வரவேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share