TNGIM2024 : செங்கல்பட்டு பெகாட்ரான் தொழிற்சாலை : 8000 பேருக்கு வேலை!

Published On:

| By Kavi

பெகாட்ரான் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.1,000 கோடி முதலீடுக்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசுடன் கையெழுத்திட்டது. இந்நிறுவனம் 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கவுள்ளது.

தைவானைச் சேர்ந்த பெகாட்ரான் நிறுவனம், 2022ஆம் ஆண்டு தமிழகத்தில் ஸ்மார்ட் போன் உற்பத்தி துறையில் ரூ.1,100 கோடி முதலீடு செய்தது.

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் அமைக்கப்பட்ட PEGATRON Technology India நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி தொழிற்சாலையை அப்போது முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் அதனை விரிவாக்கம் செய்யும் வகையில் ரூ.1,100 கோடி முதலீடு செய்துள்ளது பெகாட்ரான். இந்நிறுவனம் மூலம் 8000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தைவானின் பெகாட்ரான்  ஆகிய இரு நிறுவனங்கள் ஐபோன் சாதனங்கள் உற்பத்தி யூனிட்களை விரிவுபடுத்த தமிழ்நாட்டில் முதலீடு செய்திருக்கின்றன.

கடந்த 2022 ஏப்ரல் மற்றும் மே காலக்கட்டத்தில் இந்தியாவில் இருந்து ஆப்பிள் போன்கள் ஏற்றுமதி ரூ.9,066 கோடியாக இருந்தது. இது 2023ல் இதே காலக்கட்டத்தில் ரூ.20,000 கோடியாக அதிகரித்தது. தற்போது இரண்டு ஐபோன் உற்பத்தி நிறுவனங்கள் மூதலீடு செய்திருப்பதன் மூலம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

‘எல்.ஐ.சி’ படத்துக்கு சிக்கல்?

சொந்த ஊரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: ஸ்டாலின் உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share