சதுரகிரி மலைக் கோயிலுக்கு இன்று (நவம்பர் 21) முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.
இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் சென்று வழிபட பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட மாதத்தின் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று (நவம்பர் 21) முதல் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்,
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல 4 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப் பகுதியில் (தாணிப்பாறை, வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை) உள்ள நீர் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதை அடுத்து, பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை வனத்துறை தடை விதித்துள்ளது.
காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, நவம்பர் 21 முதல் 24ஆம் தேதி வரை மலை அடிவாரத்துக்கோ, கோயிலுக்கு தரிசனம் செய்யவோ பக்தா்கள் வர வேண்டாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
புனே: அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்!
7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!