ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல தைப்பூசம், பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு அனுமதி தரப்பட்ட நிலையில் கனமழை காரணமாக இன்று (பிப்ரவரி 3) மற்றும் நாளை (பிப்ரவரி 4) சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தைப்பூசம் திருநாளை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில்,
கனமழை எச்சரிக்கையால் தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 3, 4ஆம் தேதி பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
தைப்பூசம் திருநாளை முன்னிட்டும் தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டும் பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறிச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும்,
மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட நிர்வாகத்தின் நிபந்தனைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்,
இன்றும் (பிப்ரவரி 3) மற்றும் நாளை (பிப்ரவரி 4ஆம் தேதி) பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மலையடிவாரத்துக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தைப்பூசம், பிரதோஷம் பெளர்ணமி நாட்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை மலையேறி தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்த பக்தர்கள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சென்னை ஏடிஎம்மில் ரூ.200-க்கு பதிலாக ரூ.500 வந்த விநோதம்!
கிச்சன் கீர்த்தனா : கேப்ஸி வெஜ் ஆம்லெட்!