”சென்னை ஒரு நரகம்” : பற்ற வைத்த சாரு

Published On:

| By christopher

சென்னை பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதியுள்ள அருவருக்கத்தக்க கருத்துகளுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சென்னை என்றாலே வந்தாரை வாழ வைக்கும் நகரம். உழைப்பவனை உயர்த்திவிடும் நகரம் என்ற எண்ணம் பலரின் மனதிலும் மாறாமல் உயர்ந்தோங்கி நிற்கும்.

சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளையும், வாய்ப்புகளையும் கொண்டுள்ள சென்னை இந்தியாவின் முன்னணி நகரமாக உள்ளது.

சமீபத்தில் கூட சீரும் சிறப்புமாக பிரதமர் மோடியும் வியந்து பார்க்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் சென்னையின் அழகையும், இங்குள்ள மக்களின் இயல்பான அன்பையும் பாராட்டி மகிழ்ந்தனர்.

பிழைப்புத் தேடி வந்தோரை கைவிடாத சென்னை பல அடுக்குமாடி குடியிருப்புகளில் அவர்களை அமர வைத்து அழகு பார்த்துள்ளது.

இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா, சென்னையைப் பற்றி கூறியுள்ள தரம் தாழ்ந்த விமர்சனம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

charu nivedita defame chennai city

சென்னை ஒரு நரகம்!

அவர் தனது வலைத்தள பக்கத்தில், ”சென்னை பற்றி போகன் சங்கர் எழுதியிருந்த எதிர்மறையான கருத்துகளை வாசித்தேன். இப்போதுதான் முதல்முறையாக ஒரு எழுத்தாளர் சென்னை பற்றி இப்படி எதிர்மறையாக எழுதுவதைப் படிக்கிறேன்.

இதுவரை எனக்குத் தெரிந்து சென்னை பற்றி எழுதியவர்கள் அத்தனை பேரும் இந்த நகரின் அருமை பெருமைகளைப் பற்றி எழுதியதைத்தான் படித்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அது அவர்களின் ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரம் என்று புரிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

சாக்கடையில் வசிக்கும் எலிகளுக்கு அந்த சாக்கடை சொர்க்கமாகத் தெரிவதைப் போலவேதான் இதுவும். மற்றபடி சென்னை மாதிரியான ஒரு நரகத்தைத் தமிழ்நாட்டிலேயே காண்பது அரிது.

charu nivedita defame chennai city

இந்த ஊர் மக்கள் மரியாதை என்றால் வீசை என்ன விலை என்று கேட்பவர்கள். யாருக்காவது உதவி செய்தால், பதிலுக்கு உங்கள் சொத்தையே எழுதிக் கேட்பார்கள். காசுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். முழு மூடர்கள். ஆனால் தங்களை அறிவாளிகளாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

எந்த வேலையையும் ஒழுங்காக செய்யத் தெரியாதவர்கள். சமையல்காரனுக்கு சமைக்கத் தெரியாது. ஆட்டோ, டாக்ஸி டிரைவருக்கு வழியே தெரியாது. என்னதான் வழி சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் திரும்பத் திரும்ப வழி கேட்டு உயிரை எடுப்பார்கள். மீன்காரர் அழுகிய மீனைக் கொடுப்பார். கெட்டுப் போன மீனை கடல் மணலில் புரட்டி எடுத்து, இப்போதுதான் வலையிலிருந்து எடுத்தது என்று கூசாமல் பொய் சொல்வார்கள்.

முடிவெட்ட 300 ரூபாய்!

எந்த ஊரிலாவது முடி வெட்டுவதற்கு 300 ரூ. வாங்கிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெரிய பெரிய கம்பெனிகளாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அங்கே குளிர்சாதன வசதி அது இது என்று ஏகப்பட்ட செலவுகள் உண்டு. ஒன்றுமில்லாத பெட்டிக்கடை மாதிரியான முடிதிருத்தும் நிலையத்திலேயே முந்நூறு ரூபாய் வாங்குகிறார்கள்.

இங்கே மைலாப்பூர் அப்பு முதலித் தெருவில் ஒரு அய்யர் முடி வெட்டுகிறார். கடைக்குள் உடம்பைக் காட்டும் பெண்களின் படங்களுக்குப் பதிலாக மஹா பெரியவரின் பெரிய படம் மாட்டியிருக்கும். ஸ்பீக்கரில் அபிராமி அந்தாதி ஒலிக்கும். அய்யர் கெட்டிக்காரர்.

எனக்கு இரண்டரை நிமிடத்தில் முடி வெட்டி விடுவார். முந்நூறு ரூபாய். இவராவது நல்லபடியாக முடி வெட்டி கொள்ளை லாபம் அடிக்கிறார். மற்ற துறைகளில் வேலையே செய்யத் தெரியாமல் கொள்ளை அடிப்பார்கள்.

சென்னைவாசிகள் பலருக்குமே ஒரே நாளில் அம்பானியாகி விட வேண்டும் என்பதுதான் கனவு.

charu nivedita defame chennai city

நாய், பூனை, காக்கா கறி பிரியாணி!

ஈகை குணம் என்றால் என்னவென்று கேட்பார்கள். நாயைக் கண்டால் கல்லால் அடிப்பார்கள். சீச்சீ என்று துரத்துவார்கள். பூனைகளைத் தம் ஜென்ம விரோதிகளாகவே பாவிப்பார்கள். கர்ப்பிணிப் பூனைகளைக் கூட காலால் அடித்துத் துரத்துவார்கள். பூனைகளைப் பிடித்துக் குறவர்களிடம் கொடுத்துத் தின்னச் செய்வார்கள்.

நாய்களைப் பிடித்துக் கொன்று அதன் கறியை ஆட்டுக் கறியில் கலந்து பிரியாணி செய்வார்கள். காகங்கள், பூனைகளின் கறியையும் பிரியாணியில் கலப்பார்கள்.

ஓட்டல்களில் உள்ள சமையல் அறைகள் அசல் சாக்கடையாகவே இருக்கும். இங்கே கிடைக்கும் தேநீர் கழுதை மூத்திரத்துக்குச் சமானம்.

இங்கே கிடைக்கும் பிரியாணி நோய்ப்பாடு வந்த குரங்கின் மலத்துக்குச் சமானம்.

இங்கே உள்ள வேசிகளிடம் போவதை விட ஆண்குறிகளை அறுத்துப் போட்டு விடுவது உசிதம். அத்தனை துர்நாற்றம். அத்தனை அசிங்கம். உவ்வே.

நாற்பது ரூபாய் தூரத்துக்கு ஆட்டோக்காரர் இருநூறு ரூபாய் கேட்பார். இருநூறு ரூபாய் தூரத்துக்கு ஆயிரம் கேட்பார். கால் டாக்ஸிக்காரர்கள் செய்யும் அட்டூழியங்கள் பற்றி ஆயிரம் பக்கத்துக்கு ட்ராஜடி நாவல் எழுதலாம்.

பணக்காரர்கள் பண்ணும் சின்னத்தனங்களை இங்கே உள்ள பப்களில் எக்கச்சக்கமாகக் காணலாம்.

charu nivedita defame chennai city

எந்தத் தகுதியுமே இல்லாத நரகம்!

எதற்குமே லாயக்கு இல்லாத, கருணை, ஈகை இல்லாத, அறம் சார்ந்த எந்த மதிப்பீடுகளும் இல்லாத வெறும் சக்கைக் கூட்டமே சென்னை வாழ் மனிதர்கள்.

ஆனாலும் நீ ஏன் இங்கே வாழ்கிறாய் என்று என்னைக் கேட்டால், என் மனைவிக்காக என்றே சொல்வேன். அவளுக்காக நான் செய்யும் தியாகம் இது. நான் தனியாளாக இருந்தால் பாண்டிச்சேரியிலோ, கோவாவிலோ அல்லது ஹைதராபாதிலோதான் வாழ்வேன். சென்னை, மனிதர் வாழ்வதற்கான குறைந்த பட்சத் தகுதி – அல்லது, எந்தத் தகுதியுமே இல்லாத நரகம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சென்னையைப் பற்றி மோசமான வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ள சாரு நிவேதிதாவின் கருத்து பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ள நிலையில் அவருக்கு பலரும் எதிர்கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

பிக்பாஸ் வீட்டில் மீ டு புகாரில் சிக்கிய இயக்குநர்: கொந்தளிக்கும் நடிகை!

நயன் – விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம்: விசாரணை தொடக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel