சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரநாத் பண்டாரி கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து அதற்கு அடுத்த இடத்தில் இருந்த மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அவர் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து வழக்குகளை விசாரித்து வந்தார். இந்தநிலையில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று(நவம்பர் 16) கூடியிருக்கிறது.
அப்போது சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் டி.ராஜாவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக , ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் முரளிதரை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது.
ஆனால் அந்த பரிந்துரை மீது மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே உயர் நீதிமன்றத்துக்கு மீண்டும் பொறுப்பு நீதிபதியே நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
மூத்த நீதிபதியாக இருக்கும் பரேஷ் உபாத்யாய் அந்த பொறுப்பிற்கு பரிந்துரைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
கலை.ரா
விண்ணை முட்டும் சரணகோஷம்: விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!
கால்பந்து உலகக்கோப்பை : வரலாற்று பெருமையில் நனையும் கத்தார்!