திருச்சியில் இன்று (ஜூலை 25) முதல் மூன்று நாட்களுக்கு பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சாவூர், திருச்சி ரயில்வே கோட்டம் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று (ஜூலை 25 – செவ்வாய்க்கிழமை) மற்றும் 26, 27 ஆகிய மூன்று நாட்களில் ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் – திருச்சி – திண்டுக்கல் முன்பதிவில்லா விரைவு ரெயில் (வண்டி எண்-06498/06499) மற்றும் மயிலாடுதுறை – திருச்சி – மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரயில் (16233/16234) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
திருப்பாதிரிபுலியூர் – திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரயில் (06889) லால்குடி – திருச்சி இடையேயும், வேளாங்கண்ணி – திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரயில் (06839) பொன்மலை – திருச்சி இடையேயும், திருச்சி – காரைக்கால் டெமு முன்பதிவில்லா விரைவு ரயில் (06880) திருச்சி – திருவெறும்பூர் இடையேயும், திருச்சி – திருப்பாதிரிபுலியூர் டெமு முன்பதிவில்லா விரைவு ரயில் (06890) திருச்சி – வாளாடி இடையேயும், விருத்தாசலம் – திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரயில் (06891) ஸ்ரீரங்கம் – திருச்சி இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல் திருச்சி – விருத்தாசலம் டெமு முன்பதிவில்லா விரைவு ரயில் (06892) திருச்சி – லால்குடி இடையேயும், காரைக்குடி – திருச்சி முன்பதிவில்லா விரைவு ரயில் (06126) குமாரமங்கலம் – திருச்சி இடையேயும், திருச்சி காரைக்குடி முன்பதிவில்லா விரைவு ரயில் (06125) திருச்சி – குமாரமங்கலம் இடையேயும், சென்னை – திருச்சி சோழன் விரைவு ரயில் (22675) பொன்மலை – திருச்சி இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன.
ஹுப்ளி – தஞ்சாவூர் இடையிலான சிறப்பு கட்டண விரைவு ரயில் (07325) இன்று (ஜூலை 25) சேலம், விருத்தாசலம், பொன்மலை (பை-பாஸ்) வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜ்