Changes in Nellai Tuticorin train service
நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் அங்குள்ள ரயில் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் தண்டவாளங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதனால் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் கடந்த 17ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டன. மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்தூர் வர வேண்டிய ரயில்கள் விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ரயில் நிலையங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, பாதிப்புகளை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதனையடுத்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சில முக்கிய மாற்றங்களை செய்து தெற்கு ரயில்வே இன்று (டிசம்பர் 20) அறிக்கை வெளியிட்டுள்ளது. changes in
அதில், ”திருநெல்வேலி திருச்செந்தூர் கோட்டத்தில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக, இன்றும் நாளையும் ரயில் சேவையில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!
1. 06680 திருச்செந்தூரில் இருந்து வஞ்சிமணியாச்சிக்கு இன்று செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்
2. 06672 வஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று இரவு 8.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்
3. 06847 தூத்துக்குடியில் இருந்து வஞ்சிமணியாச்சிக்கு இன்று இரவு 8.30 மணிக்கு செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்
4. 06848 வஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு நாளை (டிசம்பர் 21) காலை 3.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்
5. 06671 வஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு நாளை காலை 8.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்
புறப்படும் ரயில் நிலையம் மாற்றம்!
இன்று மாலை 5.15 மணிக்கு புறப்படும் 16235 தூத்துக்குடி – மைசூரு விரைவு ரயில் சேவையில் தூத்துக்குடி – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி விருதுநகரில் இருந்து ரயில் சேவை தொடங்கும்.
இன்று மாலை 8.25 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி – சென்னை எழும்பூர் – முத்துநகர் அதிவிரைவு ரயில் சேவையில் தூத்துக்குடி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி மதுரையில் இருந்து ரயில் சேவை தொடங்கும்.
அட்டவணையின்படி இயக்கப்படும் ரயில்!
20923 திருநெல்வேலியில் இருந்து குஜராத் காந்திதாம் செல்லும் அதிவிரைவு ரயில் அதன் வழக்கமான அட்டவணையின்படி நாளை காலை 8 மணிக்கு புறப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பொதுத்தேர்வு தேதி மாற்றமா?: அமைச்சர் விளக்கம்!
மிமிக்ரி சர்ச்சையில் சாதி சர்ச்சையை கிளப்பிய ஜெகதீப் தங்கார்
Changes in Nellai Tuticorin train service