சந்திரயான்-3 திட்ட இயக்குனரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வீரமுத்துவேலுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக நேற்று (ஆகஸ்ட் 23) நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது.
இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியது.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவரும், சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேலுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர்,”வாழ்த்துகள். சந்திரயான் வெற்றிபெற்றது தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல இந்தியாவுக்கே உலக அளவில பெருமையை தேடி கொடுத்துருக்கீங்க. விழுப்புரம் மாவட்டத்தில இருக்க உங்க அப்பாவோட பேட்டிய பார்த்தேன் ரொம்ப பெருமை பட்ருக்காரு. நீங்க தமிழ்நாட்டுக்கு வரும் போது தகவல் மட்டும் சொல்லுங்க நா வந்து உங்கள சந்திக்கிறேன். எல்லோருக்கும் வாழ்த்துகள் சொல்லிருங்க” என்றார்.
'அறிவியல் தமிழர்' வீரமுத்துவேல் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம்!#Veeramuthuvel #Chandrayaan3#Ch3 pic.twitter.com/B87pQ4WQxM
— M.K.Stalin (@mkstalin) August 23, 2023
அதற்கு பதிலளித்த வீரமுத்து வேல்,“நீங்கள் என்னை தொடர்பு கொண்டது ரொம்ப ரொம்ப சந்தோசம் சார்.
உங்களோட சர்வீஸ் எல்லாம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சார்” என்றார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதள பங்கங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு சேமியா – கொள்ளு வடை