நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி இருவரும், சக பள்ளி மாணவர்களால் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 10 மணிக்கு கொடூரமாக வெட்டப்பட்டனர்.
இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சந்திரா செல்வி இச்சம்பவம் குறித்து மின்னம்பலத்திற்கு இன்று (ஆகஸ்ட் 12) பேட்டியளித்துள்ளார்.
அவர், ”புதன்கிழம காலையில அம்மாவ கூட்டிட்டு அண்ணே ஸ்கூலுக்கு வந்தான். ஹெச்சம் கிட்ட அண்ணனும் அவன் பிரண்டும் நடந்த எல்லாத்தயும் எழுதி கொடுத்தாங்க.
புதன்கிழம சாயந்திரம் 6 மணிக்கு அந்த அண்ணேமாரெல்லாம் வந்து, ”நீ எஸ்.சி தானே… எப்புடி கம்ளெய்ண்ட் பண்ணலானு?” கேட்டுட்டு போயிட்டாங்க.
எங்க அண்ணே எதுவுமே சொல்லல. அப்பறம் செல்வ ரமேசோட அண்ணனும், ஆச்சியும் வந்து கத்திட்டு போனாங்க..
அவங்க, “அம்பிகா, இது உம் மவனா… உம் மவன்னு தெரியாதுனு” சொல்லிட்டு போய்ட்டாங்க… பெறகு செல்வரமேசோடா அண்ணன் வந்து ”என்னப்பா தம்பி பிரச்சனனு” கேட்டாங்க, அப்போ அண்ணேன் நடந்த எல்லாத்தையும் சொன்னான். அதுக்கப்புறம் நைட் பத்து மணிக்கு மூனுபேரு வந்தாங்க.
வந்து ”நீ எஸ்.சி தானே..” அப்டினு சொல்லிட்டு பல கெட்டவார்த்தைகள போட்டு அம்மாவ ஏசி, அண்ணன வெட்டுனாங்க. சுரேஷ்குமாருன்றவன் அண்ணன கழுத்துல வெட்டவந்தப்போ நா தடுக்குறதுக்காக பிடிச்சேனா… அப்போ என் கையில பட்டுட்டு”என்று நடந்ததை சந்திராசெல்வி நம்மிடம் தெரிவித்தார்.
நெல்லை சரவணன்
”புத்தகம் தூக்க வேண்டிய வயதில் கத்தியை தூக்கும் நிலை”- தமிழிசை கவலை!
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்!
அரசு பள்ளிகளில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏன்? – அண்ணாமலை