வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 19) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளது.
அது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரும். அதன்பின்னர், வரும் 21ஆம் தேதி நெல்லூர் அருகில் சென்று மீண்டும் வட தமிழகத்தை நோக்கி, நகர்ந்து 23, 24-ம் தேதிகளில் டெல்டா-வட இலங்கை வழியாக உள் மாவட்டங்களை கடந்து அரபிக்கடலுக்கு செல்லும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன்காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு இன்று விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனினும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஈரோட்டில் முதல்வர் கள ஆய்வு முதல் கியாவின் புதிய எஸ்யூவி அறிமுகம் வரை!