தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், ஒரு சில இடங்களில் வெப்பநிலை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(பிப்ரவரி 27 ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் .
நாளை (பிப்ரவரி 28 ) மற்றும் நாளைமறுநாள் (மார்ச் 1 ) தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் மார்ச் 2 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.
அதேபோல் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சாலையோர கடையில் டீ குடித்த ஜெர்மனி அதிபர்
மணீஷ் சிசோடியா கைது: ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்…போலீஸ் தடியடி!