24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தமிழகம்

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் நாளை(நவம்பர் 10) முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் நவம்பர் 9 ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்திருந்தது.

அதன்படி 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை(நவம்பர் 10) முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வரும் 11 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும். இதனால் மிக கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும், கடல் காற்றானது 55 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் 09.11.2022 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக் கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே கடலில் உள்ள தங்கு கடல் படகுகள் அருகாமையில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரைதிரும்பவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கலை.ரா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானார் டி.ஒய்.சந்திரசூட்

மைதானத்தில் கிண்டல் செய்த ரசிகர்: ரிஷப் பந்த் பதிலடி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *