கலந்த சாதம் செய்ய நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த சென்னா ரைஸ். கறுப்புக் கொண்டைக் கடலையில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்ட இந்த சென்னா ரைஸ் அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
சாதம் – ஒரு கப்
வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை – கால் கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
சாட் மசாலாத்தூள் – 2 சிட்டிகை
மிளகுத்தூள் – சிறிதளவு
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சாதத்துடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு கலந்து ஆற வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த சென்னா, மஞ்சள்தூள், சாட்மசாலாத்தூள், உப்பு, சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும். இதனுடன் சாதம் சேர்த்துக் கலக்கவும். பிறகு, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, மிளகுத்தூள் தூவி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
கிச்சன் கீர்த்தனா: முளைப்பயிறு சப்பாத்தி!