கிச்சன் கீர்த்தனா : சாமை – பச்சைப்பயறு – நல்லெண்ணெய் சாதம்!

தமிழகம்

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விதம்விதமான சாதங்களைப் படைத்து உண்பார்கள். அந்த வகையில் இந்த வாரம் படைக்க  இந்த சிறுதானிய சாமை – பச்சைப்பயறு – நல்லெண்ணெய் சாதம்  ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

சாமை சாதம் – 2 கப்
பச்சைப்பயறு – கால் கிலோ
தக்காளி – 2 (அரைத்த ஜூஸ்)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், மராத்தி மொக்கு, கிராம்பு – தலா 2
நல்லெண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சைப்பயறை வாணலியில் இட்டு, பொன்னிறமாக வறுத்து குக்கரில் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு நான்கு முதல் ஐந்து விசில் வரை நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிக்க வேண்டியதைச் சேர்த்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்துக் கிளறி, சோம்புத்தூள், மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

இதில் மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். ஒரு கொதிவந்ததும், வேகவைத்த பயறை மட்டும் சேர்த்து கரண்டியால் மசித்துக் கிளறிவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறவும். வேகவைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.

சாமையை 10 நிமிடம் ஊறவைத்து, பின் சாதமாக வடித்து ஆறவிடவும். இலையில் சாமை சாதத்தை வைத்துச் சூடான பச்சைப்பயறு மசாலாவைச் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடவும்.

பனிவரகு – மஷ்ரூம் – டொமேட்டோ சூப்!

கிச்சன் கீர்த்தனா : சாமை – நெல்லிக்காய்ப் புட்டு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *