சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அருகே பேனா சிலை அமைக்க முதல் கட்ட அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே நடுக்கடலில் ரூ.80 கோடி செலவில் பிரமாண்ட பேனா மாதிரி வடிவம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு(42 மீட்டர்) அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஒப்புதல் அளித்த நிலையில், பேனா நினைவு சின்னத்திற்கு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள,
ஆய்வு எல்லைகளை கோரி மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதி இருந்தது.
இந்நிலையில் தற்போது, கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் போன்று அமைத்து பேனா சிலையை நிறுவ மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.
அதில், பொதுமக்கள் கருத்து கேட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கம் செல்லும்!