மத்திய அரசு அதிகாரி என நாடகமாடிய நபர் கைது!

தமிழகம்

மத்திய அரசின் நிதித்துறை அதிகாரி என கூறி மோசடி செய்ய முயன்ற மாங்காட்டை சேர்ந்த நாகசுப்பிரமணியத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (நவம்பர் 4) கைது செய்தனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று (நவம்பர் 3) தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் தான் மத்திய அரசின் நிதித்துறை இணை செயலாளர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும் தனியார் கட்டுமான நிறுவனம் கொடுத்த புகாரை துரிதமாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், நாகசுப்பிரமணியம் என்ற நபரை அனுப்பி வைக்கிறேன். அவரிடம் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒப்படையுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மர்ம நபரின் பேச்சில் சந்தேகமடைந்த காவல்துறை இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியப்படுத்தினர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அழைப்பு வந்தது தமிழகத்தை சேர்ந்த எண் என்பது கண்டறியப்பட்டது. டவர் லொகேஷன் மூலம் ஆய்வு செய்ததில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு பேசியது மாங்காட்டை சேர்ந்த சிஏ பட்டதாரி நாகசுப்பிரமணியம் என்பது தெரியவந்தது.

இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். அவர் வேலை செய்யும் தனியார் கட்டுமான நிறுவனம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளது.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் அதிகாரி போல நாடகமாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து நாகசுப்பிரமணியத்தை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

சத்தீஸ்கர் தேர்தலில் புயலை கிளப்பிய சூதாட்ட புகார்!

பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவுகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *