தமிழகம் முழுவதும் இன்று (செப்டம்பர் 1) முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் இரண்டு பிரிவுகளாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மாதம் 24 சுங்கச்சாவடிகளுக்கும் செப்டம்பர் மாதம் மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டணம் உயர்த்துகிறது.
அதன்படி 2023-ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாத சுங்கச்சாவடி கட்டணம் இன்று முதல் தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்துள்ளது. திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், மதுரை, தூத்துக்குடி உள்பட 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.85லிருந்து ரூ.90-ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.125-லிருந்து ரூ.135-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2505-லிருந்து ரூ.2740 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகுரக வாகங்கள் ஒருமுறை சென்றுவர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.145-லிருந்து ரூ.160-ஆகவும் இருமுறை சென்று வர ரூ.220-லிருந்து ரூ.240-ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.4385-லிருந்து ரூ.4800-ஆக உயர்த்தப்பட்டுள்ளது
லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகங்கள் ஒருமுறை சென்று வர ரூ.290-லிருந்து ரூ.320-ஆகவும் இரண்டு முறை சென்று வர ரூ.440-லிருந்து ரூ.480-ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.8770-லிருந்து ரூ.9595-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கார், வேன், ஜீப் வாகங்களுக்கு ரூ.5 முதல் ரூ.10-ஆகவும், இலகுரக வாகங்களுக்கு ரூ.15 முதல் ரூ.20-ஆகவும், கனரக வாகங்களுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
செல்வம்
வெளியூரிலிருந்த வரும் பஸ், ரயில் பயணிகளுக்கு உதவ… மெட்ரோவின் தகவல் பலகை!