2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 6626 crore to Tamil Nadu railway project
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரயில்வே என்ற வார்த்தை கூட இடம்பெறாத நிலையில் . ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கர்நாடக மாநிலத்திற்கு ரூ.7,564 கோடி ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்துக்கு ரூ. 3,042 கோடி ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
தொடர்ந்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரயில்வே திட்ட நிதி என்பது 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.879 கோடியை விட 7.5 மடங்கு அதிகமாகும்.
2014-ம் ஆண்டிலிருந்து 2025-ம் ஆண்டு வரை 1303 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது இலங்கையில் உள்ள முழு ரயில் கட்டமைப்புத் தூரத்தை ஏறத்தாழ நெருங்கியுள்ளது.
2014-ம் ஆண்டு முதல் 2,242 கிலோ மீட்டர் தூர ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 94 சதவீதம் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
ரூ.33,467 கோடி செலவில் 2,587 கிலோ மீட்டருக்கான 22 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.2948 கோடி மதிப்பில் 77 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
கவச் அமைப்பை 1460 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 601 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.
715 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் 2014-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் பயணிகளுக்கான மின்தூக்கிகள் 98-ம், நகரும் படிக்கட்டுகள் 53-ம் அமைக்கப்பட்டுள்ளன. 415 ரயில் நிலையங்களில் வைஃபை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
19 மாவட்டங்களை உள்ளடக்கி 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்த ரயில்கள் 20 நிலையங்களில் நின்று செல்கிறது.

மேம்படுத்தப்படும் 77 ரயில் நிலையங்கள் 6626 crore to Tamil Nadu railway project
மால்டா நகரிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் ஒரு அமிர்த பாரத் விரைவு ரயில் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தின் வழியே செல்கிறது. இரண்டு இடங்களில் அந்த ரயில் நின்று செல்கிறது.
அம்பாசமுத்திரம், அம்பத்தூர், அரக்கோணம், அரியலூர், ஆவடி, பொம்மிடி, செங்கல்பட்டு, சென்னை கடற்கரை, சென்னை எழும்பூர், சென்னை பூங்கா, சிதம்பரம், சின்னசேலம், குரோம்பேட்டை, கோயம்புத்தூர் சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு, குன்னூர், தருமபுரி, திண்டுக்கல், டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல், ஈரோடு சந்திப்பு, கூடுவாஞ்சேரி, கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஓசூர், ஜோலார்பேட்டை சந்திப்பு, கன்னியாகுமரி முனையம், லால்குடி, மதுரை சந்திப்பு, மாம்பலம், மணப்பாறை, மன்னார்குடி,
மயிலாடுதுறை சந்திப்பு, மேட்டுப்பாளையம், மொரப்பூர், நாகர்கோவில் சந்திப்பு, நாமக்கல், பழனி, பரமக்குடி, பெரம்பூர், போத்தனூர் சந்திப்பு, பொள்ளாச்சி சந்திப்பு, போளூர், புதுக்கோட்டை, ராஜபாளையம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், சேலம், சாமல்பட்டி, சோழவந்தான், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், பரங்கிமலை, தாம்பரம், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் சந்திப்பு, திருச்செந்தூர், திருநெல்வேலி சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர், திருப்பத்தூர், திருப்பூர், திரிசூலம், திருத்தணி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, உதகமண்டலம், வேலூர் கண்டோன்மென்ட், விழுப்புரம் சந்திப்பு, விருதுநகர், விருத்தாசலம் சந்திப்பு ஆகிய 77 ரயில் நிலையங்கள் அமிர்த நிலையங்களாக மேம்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.