சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 22) வெளியிடப்பட்டுள்ளன. இதில் 92.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2021-22ஆம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்பட்டன. முதல் பருவம் கடந்த ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. 2-வது பருவ தேர்வு ஏப்ரல்-மே மாதங்களில் நடந்தது.
2 பருவ தேர்வுகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.gov.in, cbseresults.nic.in. என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு 14,44,341 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பதிவு செய்தனர். இதில்14,35,366 பேர் தேர்வு எழுதினர். 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2022 சிபிஎஸ்இ தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 92.71சதவிகிதமாக உள்ளது.
மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.25 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் அவர்களை காட்டிலும் மாணவிகள் 3.29 கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.54%ஆக உள்ளது.
~அப்துல் ராபிக் பகுருதீன்