நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியாகியுள்ளது.
சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியாகும் சரியான தேதி அறிவிக்கப்படாமலே இருந்தது.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 11) வெளியாகும் என்று இரண்டு தினங்களுக்கு முன்பு போலியான அறிக்கை ஒன்று இணையத்தில் பரவி வந்தது.
இது தேர்வு எழுதிய மாணவர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
தேர்வு எழுதிய மாணவர்கள், cbseresults.nic.in என்ற இணையத்தளம் வாயிலாக முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் 16,60,511 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 14,50,174 பேர் (87.33%) தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 92.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்வு விகிதம் 5.38 சதவீதம் குறைந்துள்ளது.
அதிகபட்சமாகத் திருவனந்தபுரத்தில் 99.91%, பெங்களூருவில் 98.64%, சென்னையில் 97.40% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மோனிஷா
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
வீரசக்கதேவி கோவில் ஜோதி ஊர்வலம்: திடீர் கட்டுப்பாடுகள்!