முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 1989-ஆம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்ச்சி பெற்று தமிழக காவல்துறையில் நேரடியாக டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர் பொன் மாணிக்கவேல்.
பின்னர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு டிஜஜி, சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி என பல பதவிகளில் இருந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி ஐஜி பொன் மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில், சென்னை நீலாங்கரை பாலவாக்கம் காமராஜர் சாலையில் வசிக்கும் பொன் மாணிக்கவேல் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெண்ணாகவே வாழ்கிறேன்… பாலின விவகாரத்தில் சிக்கி தங்கம் வென்ற இமானே உருக்கம்!
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?