தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு இன்று (நவம்பர் 24) அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணைய விதிமுறைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
காவல்துறை பணியிட மாற்றங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பதற்காக தமிழக அளவிலும், சென்னை அளவிலும் ஒரு கமிட்டி அமைக்கப்படும்.
காவல்துறை மீதான துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆறு மாதங்களுக்குள், சிபிசிஐடி போலீசார் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும்.
காவல்துறையில் பணியாற்றுபவர்கள், துறைரீதியான புகார்களை சிபிசிஐடி காவல் நிலையத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளை டிஜிபி அனுமதி பெற்று சிபிசிஐடி விசாரிக்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சிபிசிஐடி காவல் நிலையங்களில் அந்தந்த மாவட்டங்களின் காவல்துறை துறை ரீதியான புகார்கள் அனைத்தும் விசாரிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
ஒற்றுமை யாத்திரை: ராகுலுடன் இணைந்த பிரியங்கா
கால்பந்து உலகக்கோப்பை: சாம்பியனை வீழ்த்திய ஜப்பான்