நெல்லையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களின் பற்களைப் பிடுங்கிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 20) விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாசமுத்திர ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களின் பற்களை ஜல்லி மற்றும் கட்டிங் ப்ளேயரை கொண்டு பிடுங்கியதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கில் புகார்தாரர்களிடம் அமுதா ஐஏஎஸ் விசாரணை நடத்தி வருகிறார். பல்வீர் சிங் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ள நிலையில், இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு பல்வீர் சிங் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
இந்தச்சூழலில் இன்று விசாரணை அதிகாரியாக நெல்லை மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் உலகராணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளர் உலகராணி, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சிபிசிஐடி வசம் இருந்த போது, அந்த விசாரணைக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.
அதுபோன்று 2020ஆம் ஆண்டு தென்மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்திய தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கிலும் விசாரணை அதிகாரியாக இருந்தார்.
இதுபோன்று முக்கிய வழக்குகளைக் கையாண்ட உலக ராணி தற்போது பல்வீர் வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரியா
மாதவரம் சுதர்சனத்தின் ஆயிரம் ஏக்கர் மாந்தோப்பு: துரைமுருகன் வெளியிட்ட ரகசியம்!
அதிமுக அலுவலகம் தாக்குதல் : ஓபிஎஸ்- ஈபிஎஸ்-மு.க.ஸ்டாலின் காரசார விவாதம்!
எடப்பாடியின் நம்பிக்கையை உறுதி செய்த தேர்தல் ஆணையம்