கோடநாடு வழக்கு: முதன்முறையாக ஊட்டிக்கு விரைந்த சிபிசிஐடி டிஜிபி!

தமிழகம்

கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் இந்த வழக்கில் பல மர்மங்கள் இருந்ததால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதுவரை 316 பேரிடம் விசாரணை!

அதன்படி தனிப்படை போலீசார் கோவை ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தினர். அப்போது சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 316 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

இந்நிலையில் கோடநாடு வழக்கினை கடந்த மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

அதன்படி ஏற்கனவே கைப்பற்றப்பட்ட விசாரணை விவரங்கள், வாக்குமூல விவரங்களை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடமும் பின்னர் ஒப்படைக்கப்பட்டது.

CBCID DGP investigation on Kodanadu case

சிபிசிஐடி டிஜிபி விசாரணை!

இதைத்தொடர்ந்து கடந்த 22-ந் தேதி கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக சிபிசிஐடி டி.ஜி.பி. ஷகில் அக்தர் இன்று ஊட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

முதலில் கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை, கொலை சம்பவம் நடந்த இடத்தினை டிஜிபி ஷகில் அக்தர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக டிஜிபி விசாரணை நடத்தி வருகிறார்.

வரும் 28ம் தேதிக்கு பிறகு ஊட்டி நீதிமன்றத்தில் கோடாநாடு எஸ்டேட் வழக்கு விசாரணை வருகிறது. அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரிக்க உள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

T20 WorldCup 2022: தொடரும் சோகம்… அயர்லாந்து அணியிடம் அடிபணிந்த இங்கிலாந்து!

தோனியின் முதல் படத்தின் ஹீரோ, ஹீரோயின் யார்?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *