cauvery water regulation committee tamilnadu water release

தமிழகத்திற்கு நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை!

நாளை (நவம்பர் 24) முதல் டிசம்பர் மாதம் வரை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2,700 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு இன்று (நவம்பர் 23) பரிந்துரை செய்துள்ளது.

டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 17 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தநிலையில் நாளை முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்துக்கு காவிரியிலிருந்து 2,700 கன அடி நீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

முன்னதாக அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நவம்பர் 22-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்க: முத்தரசன்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts