காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்கள் தண்ணீர் திறக்க பரிந்துரை!

தமிழகம்

டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு வலியுறுத்தக்கோரி காவிரி ஒழுங்காற்று ஆணையத்தில் தமிழக அரசு தொடர்ச்சியாக முறையிட்டு வருகிறது.

முன்னதாக தமிழகத்திற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த தண்ணீர் போதாது என்று தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நாளை வர உள்ளது.

இந்தநிலையில் காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் 86-ஆவது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கிய கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கர்நாடகா, புதுச்சேரி, தமிழ்நாடு மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவானது அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கன அடி வீதம் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரையளித்துள்ளது. இந்த கூட்டம் நடைபெற்று வரக்கூடிய சூழலில் கர்நாடக அரசு தரப்பில் எந்தவிதமான முடிவும் தெரிவிக்கப்படவில்லை.

செல்வம்

சுசி கணேசனின் ’தில் ஹை கிரே’: ஆடியோ டீசர் ஸ்பெஷல் என்ன?

கோவையில் பயங்கரம் : நீதிமன்றம் சென்று திரும்பியவர்களுக்கு அரிவாள் வெட்டு!

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0