தமிழகத்திற்கு 2600 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழகம்

நவம்பர் 23-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 2600 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை நீர் ஆணையம் இன்று (நவம்பர் 3) உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், “நவம்பர் 23-ஆம் தேதி வரை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2600 கன அடி நீர் திறக்க வேண்டும்” என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டார்.

மேலும், “காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், காவிரியில் நீர் வரத்து எவ்வளவு உள்ளது? அணை நீர் மட்டம், மழைப்பொழிவு காவிரி பகுதியில் எவ்வாறு உள்ளது? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து கவனிக்கும். காவிரி மேலாண்மை ஆணையத்தின்  உத்தரவிற்கு கர்நாடகா அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணாமலை நடைபயணம் வழக்கு: அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!\

காற்று மாசால் நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0