காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு நாளை (செப்டம்பர் 18) டெல்லி செல்கிறது.
இந்த குழுவில் டி.ஆர்.பாலு (திமுக), ஜோதிமணி (காங்கிரஸ்), மு.தம்பிதுரை (அதிமுக), என்.சந்திரசேகரன் (அதிமுக), கே.சுப்பராயன் (சிபிஐ) , பி.ஆர்.நடராசன் (சிபிஎம்) , வைகோ (மதிமுக) ,திருமாவளவன் (விசிக) , அன்புமணி ராமதாஸ் (பாமக) , ஜி.கே.வாசன் (தமாகா) கே.நவாஸ் கனி (இயூமுலீ), ஏ.கே.பி.சின்னராஜ் (கொமதேக) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திய அம்மாநில முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து டெல்லி சென்ற அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், மத்திய நீர் வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேசினார். காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு நாளை டெல்லி செல்கிறது.
தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் செல்லும் இந்த குழுவில் மேற்குறிப்பிட்ட 12 எம்.பி,க்கள் இடம் பெற்றுள்ளனர்.
நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டமும் நடைபெறவுள்ளது. வரும் 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
பிரியா
இந்திய அணி பந்துவீச்சில் சுருண்ட இலங்கை
Asia Cup 2023 Final: ஒரே ஓவரில் 4 விக்கெட்.. ‘முகமது சிராஜ்’ புதிய சாதனை!