காவிரியில் இருந்து நீர் திறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடகா முறையாக செயல்படுத்தியுள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் சூழலில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு நீரை திறந்து விட வேண்டும்.
அதன்படி, காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை காப்பாற்றகாவிரி மேலாண்மை வாரியம் கடந்த முறை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் 38 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி வலியுறுத்தியது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை ஏற்காமல் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்து விட்டது.
இந்த நிலையில், காவிரி பிரச்சினையில் கர்நாடகா இதுவரை தமிழகத்திற்கு திறந்துவிட்ட தண்ணீர் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை உச்சநீதி மன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று (ஆகஸ்ட் 31) தாக்கல் செய்துள்ளது.
அதில், காவிரியில் இருந்து நீர் திறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடகா முறையாக செயல்படுத்தியுள்ளதாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 12 முதல் 26ம் தேதி வரை 1.49 லட்சம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரிப் படுகையில் உள்ள நீர்த்தேக்கங்கள் முக்கியமாக தென்மேற்குப் பருவமழையை நம்பியே உள்ளன.
தமிழ்நாட்டின் நீர்த்தேக்கங்களும் வடகிழக்கு பருவமழை மூலம் நன்மை கொண்டுள்ளது. ஆனால் கர்நாடகாவில் நீர் பற்றாக்குறை உள்ளது.
கர்நாடகாவில் மழை இல்லாததால் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.
அதேவேளையில், கர்நாடகாவின் மழை அளவை கருத்தில் கொண்டு தான் காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இளம் வயது பெண்களிடம் அதிகரிக்கும் மாரடைப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி: மீண்டும் ஆளுநருக்கு கோப்பு அனுப்பி வைப்பு!