சிவகங்கை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டியதற்காக பட்டியலின மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு, கைகள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. caste attack for bullet riding
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமன் – செல்லம்மா தம்பதியினர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு முனிசாமி, அய்யாசாமி என்ற இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு இவர்கள் புதிதாக வீடு கட்டியதும், சமீபத்தில் புல்லட் வாங்கியதும், அங்கிருந்த சில முன்னேறிய சாதி இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்த நிலையில், சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் அய்யாசாமி நேற்று (பிப்ரவரி 12) கல்லூரி முடிந்து புல்லட்டில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அப்போது 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, ’பட்டியலின சாதியில் பிறந்த நீ, எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம்? கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவாய்” என்று கூறி அய்யாசாமியின் கையை வாளால் வெட்டி இருக்கின்றனர்.
அவர்களிடம் இருந்த தப்பிய அய்யாசாமி, உயிரை கையில் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த நிலையில் அவரை குடும்பத்தினர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு வெட்டப்பட்ட கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே அய்யாசாமியின் வீட்டிற்கு சென்ற அந்த 3 பேரும், வீட்டை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர்.
மூவரும் கைது! caste attack for bullet riding

இதுதொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த வல்லரசு, ஆதிஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதான வினோத் மற்றும் ஆதி ஈஸ்வரன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உசிரே போனாலும் பரவாயில்லைனு… caste attack for bullet riding
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் தாயார் செல்லம்மா கூறுகையில், “இதுபோன்று ஒவ்வொரு தடவை நடக்கும்போது போலீசிடம் தெரிவித்தோம். ‘உடைத்தது யார் தெரியுமா, யாருன்னு கைக்காட்டுங்கள் ஸ்டேசனுக்கு தூக்கிட்டுப் போய் லாடம் கட்டுகிறோம்’ என்று கேட்டார்கள். ஆனால் பையன்களின் உயிருக்கு ஆபத்து என்பதால் பிசிஆரில் புகார் அளிக்கவில்லை. நேத்து என் மகன் உயிரையே எடுக்கும் அளவுக்கு துணிந்துவிட்டனர். நான் வீட்டில் இருந்திருந்தால், என்னையும் கொன்றிருப்பார்கள். அதனால் உசிரே போனாலும் பரவாயில்லை என்று இப்போது போலீசில் புகார் அளித்துள்ளோம். இதுக்கு நீங்கதான் தீர்ப்பு சொல்லனும்” என்கிறார் வேதனயுடன்